ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக Read More

Read more

பிரித்தானியாவில் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிப்பு!!

பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் வெப்பநிலை உயரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் எதிர்வரும்  வாரம் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பதால் முதல் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், மென்செஸ்டர் மற்றும் யோர்க் பகுதிகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தொடருந்து பாதைகளில் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன் சில பாடசாலைகள் Read More

Read more

இலங்கையில் மீண்டும் முழு ஊரடங்கு!!

இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.   ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.   கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.   இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

ஊரடங்கு உத்தரவில் தொடர்பான புதிய அப்டேட்!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13/05/2022) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை மதியம் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 14 ஆம் திகதி  காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

Read more

ஊரடங்கு உத்தரவில் மாற்றம்!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிமுதல் அமுலுக்கு வரும். அது 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read more

புதிய அரசுடன் பேசி நிறைவேற்று அதிகார முறையை நீக்க தயார்….. விசேட உரையில் ஜனாதிபதி – முழுமையான விபரங்கள், காணொளி!!

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தான் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.   இன்றிரவு 9 மணிக்கு வெளியிட்ட விசேட அறிவிப்பில் இதனைக் கூறியுள்ளார்.   இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,   “19ஆவது திருத்தம் விரைவில் வலுப்படுத்தப்படும். நாடு வழமைக்கு மாறிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.   இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மக்களின் Read More

Read more

கோட்டாபயவிற்கு இறுகும் நெருக்கடி- வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை

Zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. சபாநாயகருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார, ரவூப் ஹக்கீம், ரணில் விக்கிரமசிங்க, ரிஷாத் பதியுதீன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். அலி சப்ரி மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் அரசாங்கம் சார்பில் இணைந்தனர். அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read More

Read more

இன்றிரவு கோட்டாபயவின் விசேட அறிவிப்பு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். அவரது இந்த அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. நாட்டில் தற்போது அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில் அரச தலைவர் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.    

Read more

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் Read More

Read more

எரிவாயு ஏற்றும் பாரவூர்திகளுக்கும் தீ வைப்பு….. கேகாலையில் சம்பவம்!!

கேகாலை – மாவனெல்லை பகுதியில் லிட்ரோ எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கும் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர். குறித்த எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் மஹீபால ஹேரத் என்பவருக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.   இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவனெல்லை தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை Read More

Read more