முதன் முதலாக யாழில் நடைபெறவிருக்கும் மாநாடு !
யாழ். பல்கலைக்கழக கலைப் பீட இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. “சமத்துவம், சமநீதி மற்றும் அபிவிருத்திக்கான மானுடவியல் சமூக விஞ்ஞானம்” எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வரங்கில் கடந்த வருடம் கலைப் பட்டதாரிகளாக வெளியேறிய சுமார் 100 மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நிகழ்வுகளை நிகர்நிலையிலும் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் மேற்கொண்டுள்ளது. Read More
Read more