இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

அதிவேக நெடுஞ்சாலை விபத்து….. இருவர் உயிரிழப்பு!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார். கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த பௌசர் ட்ரக் அதிவேக நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது. இதில் பாரவூர்தியில் பயணித்த 72 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, பௌசர் ட்ரக் வண்டியின் சாரதியான 61 வயதுடையவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

Read more

மாத்தளையில் 27 வயது இளைஞன் வெட்டி கொலை!!

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாத்தளை, மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்த, செலகம பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சாந்தபுரம், பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயது நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது கொலைக்குப் Read More

Read more