உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு – இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன…… கல்வி அமைச்சர்!!

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகாத நிலையில் பரீட்சைகள் நிறைவடைந்து ஆறுமாதங்கள் கடந்து விட்டது.   இந்நிலையில், உயர்தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்ட இந்தத் தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு இன்று(03/08/2022) அறிவித்துள்ளார். Read More

Read more

பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை….. கல்வி அமைச்சு!!

அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கப்பல் வருவது மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் செய்தியே இதற்குக் காரணமாக கூறப்படுகின்றது.   எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா Read More

Read more

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். 2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான Read More

Read more

ஆசிரியர்களுடன் மாணவர்களும் அயல் பாடசாலைகளுக்கு மாற்ற வேண்டும்….. கல்வி அமைச்சின் செயலாளர்!!

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்யே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை மாற்றித் தருமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை உண்மையில் சிறந்ததொரு யோசனையாகும். எவ்வாறிருப்பினும், அதிபர், ஆசிரியர்களுக்கு மாத்திரம் Read More

Read more

அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் மகனும், ஆசிரியரும் கையும் களவுமாக சிக்கினர்!!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின்  கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில்,   தற்போது கா.பொ.த. உயர் தர பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் Read More

Read more

உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள். குறித்த வைத்தியசாலையே பரீட்சை நிலையமாகவும் செயற்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சை நீண்ட கால தாமதமான பரீட்சை என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காகவே இவ்விசேட Read More

Read more

கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி!

இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்றும் ‘அகப்படுத்தப்பட்ட சேவைகளாக’ பிரகடனப்படுத்தி கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அகப்படுத்தப்பட்ட சேவை அறிவித்தலானது, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஏனைய நிறுவன நடவடிக்கை தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள், Read More

Read more

இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், சில கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளை திறப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதனால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் வெளியிலிருந்து உணவை எடுத்து செல்ல வேண்டும் என Read More

Read more

எதிர்வரும் திங்கள் முதல் பழையபடி பாடசாலைகள் நடைபெறும்!!

எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் பாடசாலைக்கு வரவழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை வௌியிடவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் Read More

Read more

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி – ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். எனவே, தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாட்டை தொடர்ந்தும் புறககணிக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை (22) கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண திங்கள்கிழமை (26) அமைச்சரவையில் ஒரு திட்டத்தை சமர்ப்பிப்பதாக Read More

Read more