விளையாட்டு நிகழ்வு முடிந்ததும் காணாமல்போன….. சிறுவர் இல்லத்தில் இருந்த16 வயது சிறுமி!!

சிறுவர் இல்லத்தில் இருந்த 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவர் இல்லத்தின் விடுதி பொறுப்பாளர் குளியாப்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். ஹலவத்த – கட்டுபொத்த எரோமா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளார். மஹவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுமி இந்த சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வடமேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வு நேற்று (02/09/2023) குளியாபிட்டிய ஷில்பா ஷாலிகா விளையாட்டரங்கில் Read More

Read more

17 வயதான சிறுமி மாயம்….. உதவி கூறும் உறவுகள்!!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் 17 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர். தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த சமயம் சென்ற குறித்த சிறுமியே காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியிலேயே சிறுமி காணாமல் போயுள்ளார். காணாமல்போன சிறுமி தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் (0773715446 –0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more

உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் மாயம்!!

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளையே காணவில்லை என்று கூறப்படுகின்றது. அவர்களில் ஒருவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும் ஒருவர் உரும்பிராயை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

Read more

14 வயது சிறுமி ஒருவர் மாயம்!!

தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கலஹா காவல் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Read more

சிறுமி “பாத்திமா ஆயிஷா”வின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது….. குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி!!

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.   இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.   9 வயது சிறுமி ‘ஆயிஷா’ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் கைது….. Read More

Read more

பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்த சிறுமி பாடசாலை வளாகத்தில் திடீரென மாயம்!!

அம்பாறை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று(29/05/2022) மதியம் 2.30 மணியிலிருந்து மாயமாகி உள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை, கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்தே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை காவல் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.   காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை காவல்துறையினர் Read More

Read more

கொழும்பில் 18 வயது மாணவி மாயம்!!

கொழும்பு – பம்பலபிட்டி மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதான மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கல்கிஸ்ஸை − பீரிஸ் வீதியைச் சேர்ந்த மாணவி ஒருவரே காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவி கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

17 வயது மாணவன் வீட்டில் சண்டையிட்டு பெற்றோரையும், காவல்துறையையும் திசை திருப்ப செய்த காரியம்!!

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் என்ற மாணவன் காணாமல் போன நிலையில் கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றிருந்த மேற்படி மாணவன், வீடு திரும்பவில்லை. இதனால், வாழைச்சேனை காவல் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். காணாமல் போன மாணவன் சென்றிருந்த துவிச்சக்கரவண்டியும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணிகள் போன்றவை பாசிக்குடா – கல்மலை கடற்கரையில் இருந்து மறுநாள் 29ஆம் திகதி Read More

Read more

கனடாவில் காணாமல் போன யாழ் யுவதி தொடர்பில் அவரது குடுமத்தவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கனடாவில் காணாமற்போன தமிழ் யுவதி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்ற யுவதி கடந்த 16 ஆம் திகதி காணாமற் போயிருந்தார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கனடா ரொறன்டோ காவல்துறையினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவரும் மாயம்!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவரும் காணாமற் போயுள்ளதாக ரொறன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமற் போனவராவார். கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டார். குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் காணப்படுகிறார். அவர் கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு Read More

Read more