நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய, நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Read more

ஆறு வாரங்களில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!!

ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நிறைவுற்றிருக்குமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நாட்டில் பல கிராம சேவகர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கிறோம். சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டன. சீனாவில் Read More

Read more

2 Dose Sinopharm பெற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது Dose Moderna /Pfizer /AstraZeneca!!

2 சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், எஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது அவசியம் என்று விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவது முறையற்றதெனவும் அது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் செயற்பாடு என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்கள் அதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர்கள் குழு, உலக Read More

Read more