பல விடயங்களுடன் நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டார் மஹிந்த….. முழுமையான விபரங்கள்

“முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்திலுள்ள இத்தருணத்தில் சமூகத்தில் உள்ள பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு இஸ்லாம் மக்களுக்காக வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாம் Read More

Read more

பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம்- மீண்டும் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும் என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது. மேலும் இருதரப்பு ஒத்துழைப்பின் சகல பிரிவு மீளாய்வு அடுத்த வருடம் முதல் காலாண்டில் ஒன்றிணைந்த ஆணைக்குழுவை கூட்டி கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்காவில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் என ஐரோப்பிய Read More

Read more

அமெரிக்கா உட்பட 15 தொண்டு நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் விடுத்த முக்கிய அறிவிப்பு!!!!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யும் வரை அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பதினைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு இலங்கைக்கு ஜி எஸ் பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்தன. இதற்கிடையில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அது இரத்து செய்யப்படாது Read More

Read more

ஹஜ் யாத்திரை தொடர்பில் சவூதி அரசு வெளியிட்டுள்ள செய்தி!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு 60,000 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக சவூதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ஜூலை மாதம் மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கொவிட்19 பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். Read More

Read more