கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகாமையில் கிடந்த பெட்டி ஒன்றினால் பரபரப்பு!!
தென்னிலங்கையில் அநாதரவாகக் கிடந்த மர்மப் பெட்டி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகாமையில் அநாதரவாக கிடந்த பெட்டி ஒன்றினாலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த மர்மப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், கோட்டாபய ராஜபக்வின் வீட்டிற்கருகாமையில் உள்ள அம்புல்தெனிய சந்தியில் மர்மப் பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை காவல்துறையினர் சோதனைக்குட்படுத்தியபோது, பெட்டியினுள் விளையாட்டு துப்பாக்கிகள் இருப்பதை மிரிஹான காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். Read More
Read more