பாடசாலைப் போக்குவரத்து கட்டணம் பெப்ரவரி முதல் அதிகரிப்பு!!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலைப் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக நிச்சயமாக பாடசாலைப் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை Read More
Read more