வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

சுற்றுலா மற்றும் பிற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை அனுமதி (Cabinet approval) கிடைத்தவுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என திறைசேரியின் (Ministry of Finance) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் Read More

Read more

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது, அனைத்து துறைகளுக்கும் 6 சதவீத மிதமான அளவாக Read More

Read more

நாடாளுமன்ற தேர்தல் திகதியில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் திகதி ஓரிரு நாட்கள் மாற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 வது பிரிவின்படி தேர்தலுக்கு நாட்கள் ஒதுக்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. இந்த நிலையில், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் Read More

Read more

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு யாழ் பல்கலையின் முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கானது எதிர்வரும் ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் விஞ்ஞான மாணவர்களுக்காகவே குறித்த கருத்தரங்கானது இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள Read More

Read more

ஆறு மாதங்களாக தந்தையிடமிருந்து பதில் இல்லை : வெளிநாட்டிலிருந்து வந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி

ஆறு மாதங்களாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காத தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிய இத்தாலியில்(italy) இருந்து வந்த மகன் நம்ப முடியாத சம்பவத்தை கண்டுள்ளார். ஆம் வீட்டினுள் தந்தை உயிரிழந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்துள்ளார். களுத்துறை(kalutara) நாகொட பகுதியில் தனது 70 வயதான தந்தை தனியாக வசித்து வந்ததாக மகன் தெரிவித்துள்ளார். இந்த வீட்டில் சிலகாலம் முன்பு வசித்து வந்த தாயும் இறந்துவிட்டார். இத்தாலியில் இருந்த அவரது மகன், இலங்கையில் தந்தையிடம் நலம் விசாரித்துவருவதுடன் மனைவி Read More

Read more

சட்டவிரோதமாக டீசல் விற்பனை : ஒருவர் கைது

அனுராதபுரம் (Anuradhapura)- கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபரை 1,225 லீற்றர் டீசலுடன் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ, நாமல்புர பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது இதன்போது, Read More

Read more

இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த Read More

Read more

நாடாளுமன்ற தேர்தல் : இன்று வழங்கப்படவுள்ள விருப்பு எண்கள்

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வழங்குவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) விருப்பு எண்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை ஆராய்ந்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு Read More

Read more

யாழில் காவல்துறை உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு : ஒருவர் கைது

யாழில் (Jaffna) காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த நபர்  நேற்றையதினம் (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்து ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவை திருடப்பட்டுள்ளன. இதையடுத்து, திருட்டு Read More

Read more

இணையவழிமோசடி : மீண்டும் சிக்கிய வெளிநாட்டவர்கள்

இலங்கையில்(sri lanka) இணையவழி மோசடியில் தொடர்புபட்டுள்ளனரென தெரிவித்து அண்மைய சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சீன(china) பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து கைபேசிகள்,மடிக்கணனிகள், மற்றும் ரவுட்டர்கள் என பல இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் சிலாபத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 Read More

Read more