அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இலங்கை மத்திய வங்கி!!

623 அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100% உத்தரவாத தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்று நடைப்பெற்ற மத்திய வங்கியின் நாணய சபைக் கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதிகபடியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி வீத உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் கீழ், கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், புடவைகள் மற்றும் உதிரி Read More

Read more