யாழில் பட்டப்பகலில் பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய….. 18, 20, 23 மற்றும் 24 வயது இளைஞர்கள் கைது!!

யாழ் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ் . மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

Read more

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூரான் மகோற்சவம்….. புதிய நடைமுறைகள் வெளியீடு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது. மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(26/07/2022) காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் Read More

Read more

இளவாலையில் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்படட ‘ஆறு வயது சிறுமி’ போலீசில் முறைப்பாடு!!

யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் பல்வேறு இடங்களிலும் சிறுவர் Read More

Read more

யாழ்.பீச் ஹோட்டலில் இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை(காணொளி) !!

யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், Read More

Read more

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது….. ஆலய பரிபாலன சபையினர்!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளனர். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியான நிலையில், நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் Read More

Read more

விக்னேஸ்வரா கல்லூரி வீதி நீர் வடிகால் சம்பந்தமான கூட்டம் இன்று!!

நாளைய தினம் நடைபெறவுள்ள கரவெட்டி விக்னேஸ்வரா வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியை நீர் வடிகால் செய்யாமல் புனரமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. நீர் வடிகால் செய்யாமல் வீதி அபிவிருத்தி நடைபெற்றால் நெல்லியடி பிரதான வீதியால் வரும் வெள்ளம் முதல் அனைத்து வெள்ள நீரும் கரவெட்டி இராஜ கிராமம் மற்றும் மத்தொணி கிராமங்கள் உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகும் Read More

Read more

நாளை முதல் வட மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது.   இது இன்று( 03) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) எதிர்கூறியுள்ளார். இதனால், இன்று (03) முதல் எதிர்வரும் 08ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் Read More

Read more

பாரவூர்தி மோதியதில்….. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்!!

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக  காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் Read More

Read more

அவ்வப்போது சிறிய அல்லது ஓரளவு பெரிய மழை பெய்யும்!!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யலாம். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய Read More

Read more

தனக்கு தானே தீ வைத்த கர்ப்பிணி பெண்….. வடமராட்சி மண்டானில் சம்பவம்!!

வடமராடசியில் உள்ள மண்டன் என்னும் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவுப்பகுதியை சேர்ந்த குறித்த பெண்  மண்டான் பகுதியில்  அமைந்துள்ள தனது கணவரின் வீட்டிற்கு வருகைதந்து அங்கே ஏற்படட பிரச்னை காரணமாக, காலை 11.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெய்யை தன்மேல் ஊற்றி வயிற்றில் கருவுடன் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more