நாட்டில் உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள்!!
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து காணப்படுவதுடன், மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவசர கூட்டம் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி Read More
Read more