முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, எதிர்காலத்தில் நான்காம்கட்ட தடுப்பூசி….. புதிய சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் காலத்தில் கொவிட் – 19 நான்காம் கட்ட தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.   நேற்று புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.   இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.   எனினும், பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் Read More

Read more

மீண்டும் நாட்டில் கோவிட் மரணங்கள்….. நேற்று மட்டும் நான்கு பேர் மரணம்!!

நாட்டில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இவ் உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,469 ஆக உயர்வடைந்துள்ளது.

Read more

கொரோனாத் தொற்றின் தாக்கம் தொடர்பாக WHO வெளியிடட முக்கிய அறிவிப்பு!!

கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Read more

ஜப்பான் நாட்டின் இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஜப்பான் நாட்டின் இளவரசி யோகோவிற்கு (Yoko) கொரோனா நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால், தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 38 வயதான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக, காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த Yoko-விற்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. Read More

Read more

புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட தினமும் அதிகமான தொற்றாளர்கள்….. உபுல் ரோஹன!!

கொவிட் தொற்று நோய் நிலைமை சம்பந்தமாக சுகாதார அமைச்சு தினமும் வெளியிடும் புள்ளிவிபரங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட அதிகமான தொற்றாளர்கள் தினமும் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல்கள் தேசிய புள்ளிவிபரங்களுக்கு வரும் போது திரிபுப்படுத்தும் நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படி தொற்று நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தாக மாறலாம். Read More

Read more