நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read more

கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சரினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Read more

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா (Dr. Chitramali de Silva) தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more

மீண்டும் பயணத்தடை/பொது முடக்கமா….. MOH வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அல்லது பயணத்தை ஒன்றிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுகாதார சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடமிருந்து நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 திரிபுகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளில் ஒமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு வகையான பி.ஏ.2 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அது வேகமாக பரவும் தன்மை கொண்டது என பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரோன் வகை கொரோனா வைரசின் துணை திரிபுகள், பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 என உலக சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் 426 பேருக்கு பி.ஏ.2 வகை ஒமிக்ரோன் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், டென்மார்க், நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அவ்வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

173 கொரோனா நோயாளிகளுடன் இத்தாலியிலிருந்து வந்த விமானம்!!

இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Read more

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் மரணம் பதிவு!!

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணம் இது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரோன்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

அடுத்த மூன்று வாரங்களில் நாட்டில் ஆபத்து….. உபுல் ரோஹன!!

அடுத்த மூன்று வாரங்களின் பின்னர் நாட்டிற்குள் ஒமிக்ரோன் திரிபுடன் கூடிய கோவிட் தொற்று நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) எச்சரித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் நடத்தைகள் மற்றும் தற்பாதுகாப்பு போன்றவற்றை ஆராயும் போது, ஏற்கனவே ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளானவர்கள் நாட்டிற்குள் இருக்கக் கூடும் என்பது தெளிவு. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து கவனம் செலுத்தி சுகாதார அதிகாரிகள் சட்டத்தை தளர்த்தியுள்ளனர். இது Read More

Read more

இலங்கையில் 7ஆக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!!

நாட்டில் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சூடானில் இருந்து வந்த இருவரும், தன்சானியாவில் இருந்து வந்த ஒருவருமாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்கனவே, 4 பேர் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read more