கடந்த வாரத்தில் 71% அதிகரிப்பு – அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர்….. WHO!!

ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்று விவரிப்பதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் ஒமிக்ரான் திரிபு மக்களை கொன்று வருகிறது எனவும் கூறியுள்ளது. கொரோனாவின் முந்தைய திரிபுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமான உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒமிக்ரான் திரிபு பரவும் வேகத்தால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக Read More

Read more

சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,083 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று மேலும் 584 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva)தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 589,479 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து Read More

Read more

திடீரென அதிகரிக்கும் அரிசி விலை! இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் நாட்டரிசி, வெள்ளை பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு கிலோ கிராம் அரிசி 10 ரூபாவுக்கும் 15 ரூபாவுக்கும் இடையிலான விலையில் அதிகரித்துள்ளது. மேலும் சில பிரதேசங்களில் அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் நாட்டரிசி தற்போது 165 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு Read More

Read more

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் மரணம் பதிவு!!

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணம் இது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரோன்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்த நடிகர் சிம்பு!!

நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார். நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார். இதையடுத்து, வருகிற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் சிம்பு. இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் ரசிகர்களுடனான வெற்றி விழா Read More

Read more

3 மாவட்டங்களில் அதிகளவு ஒமைக்ரோன் தொற்றாளர்கள் கண்டறிவு

இலங்கையில் கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து இருந்தே ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிகரிக்கும் ஒமைக்ரோன் தொற்றுக் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”கடந்த இரு வாரங்களில் ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் இதுவரை ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read More

Read more

புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட தினமும் அதிகமான தொற்றாளர்கள்….. உபுல் ரோஹன!!

கொவிட் தொற்று நோய் நிலைமை சம்பந்தமாக சுகாதார அமைச்சு தினமும் வெளியிடும் புள்ளிவிபரங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட அதிகமான தொற்றாளர்கள் தினமும் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல்கள் தேசிய புள்ளிவிபரங்களுக்கு வரும் போது திரிபுப்படுத்தும் நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படி தொற்று நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தாக மாறலாம். Read More

Read more

அடுத்த மூன்று வாரங்களில் நாட்டில் ஆபத்து….. உபுல் ரோஹன!!

அடுத்த மூன்று வாரங்களின் பின்னர் நாட்டிற்குள் ஒமிக்ரோன் திரிபுடன் கூடிய கோவிட் தொற்று நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) எச்சரித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் நடத்தைகள் மற்றும் தற்பாதுகாப்பு போன்றவற்றை ஆராயும் போது, ஏற்கனவே ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளானவர்கள் நாட்டிற்குள் இருக்கக் கூடும் என்பது தெளிவு. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து கவனம் செலுத்தி சுகாதார அதிகாரிகள் சட்டத்தை தளர்த்தியுள்ளனர். இது Read More

Read more

இலங்கையில் 7ஆக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!!

நாட்டில் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சூடானில் இருந்து வந்த இருவரும், தன்சானியாவில் இருந்து வந்த ஒருவருமாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்கனவே, 4 பேர் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read more

ஒமிக்ரோன் தொற்று நோய் அறிகுறிகள் எவை….. ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் திடுக்கக்கிடும் முடிவுகள்!!

ஒமிக்ரோன் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில், ஒமிக்ரோனுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். அது தான் தொண்டை வலி (Sore throat). ஒமிக்ரோனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், தென் ஆபிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் Read More

Read more