40 Metric tons Oxygen நாட்டை வந்தடைந்தது!!

கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் கப்பல் 40 டொன் ஒட்சிசனை கொண்டு வந்துள்ளது. இதேவேளை, இந்தியாவிற்கு சொந்தமான சக்தி கப்பலும் நேற்று 100 டொன் ஒட்சிசனை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

தடுப்பூசியை தொடர்ந்து சீனாவிலிருந்து வருகிறது ஒக்ஸிஜன்!!

கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சீனாவில் இருந்து ஒக்ஸிஜனை இறக்குமதி செய்ய மருந்து ஒழுங்குமுறை மற்றும் வழங்கல் இராஜாங்க அமைச்சு தயாராகி வருகிறது. கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினசரி தேவைப்படும் ஒக்ஸிஜனின் அளவு 45000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து ஒக்ஸிஜனை பாதுகாப்பான கையிருப்பாக பெற அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் 120,000 லீட்டர் ஒக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில், தினமும் 21,000 லீட்டர் ஒக்சிஜன் மட்டுமே Read More

Read more

இந்தோனேஷியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாடு!!

இந்தோனேஷியாவின் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு இந்தோனேஷிய அரசாங்கம், உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒக்சிஜனுக்காக தட்டுப்பாட்டினால் 63 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் நாளாந்தம் 25,000 இற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. வேகமாக பரவும் டெல்டா வைரஸ் பிறழ்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தென்கிழக்காசியாவில் கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேஷியா பதிவாகியுள்ளது. இதுவரை 2.3 மில்லியன் கொரோனா நோயாளர்கள் Read More

Read more

பாரிய ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியா வந்தடைவு

உலகின் மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124 விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator என்பன இன்று காலை இந்தியா – டில்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பிரித்தானியா அரசால் இவை வடக்கு அயர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மூன்று ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் நிமிடத்திற்கு 500 லிற்றர் ஒக்சிஜனை உற்பத்தி செய்கிறது, ஒரே நேரத்தில் 50 பேர் பயன்படுத்த போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more