40 Metric tons Oxygen நாட்டை வந்தடைந்தது!!
கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் கப்பல் 40 டொன் ஒட்சிசனை கொண்டு வந்துள்ளது. இதேவேளை, இந்தியாவிற்கு சொந்தமான சக்தி கப்பலும் நேற்று 100 டொன் ஒட்சிசனை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read more