பானுக ராஜபக்ஸவிற்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை!!
கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஸவிற்கு 02 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதேநேரம், ஐயாயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஆகியவற்றில், கிரிக்கெட் ஒப்பந்தத்தை மீறி கருத்து தெரிவித்ததன் பின்னணியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read more