மேலும் 22 ஆயிரம் பட்டதாரிகளை இணைக்க அமைச்சரவை அனுமதி!!

ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிப்படுகிறன்றது. 2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read more

21வது சீர்திருத்த உத்தேச வரைபு வெளியிடப்பட்டது!!

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது சீர்திருத்ததின்படி அரசியலமைப்பு பேரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என 21வது சீர்திருத்த உத்தேச வரைபு குறிப்பிடுகின்றது.   21ஆவது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த வரைவில்   நிறைவேற்று அதிகாரமிக்க அரச தலைவர் முறையை நீக்கும் முகமாக அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நேற்று (23/05/2022) விஜயதாச ராஜபக்சவால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.   இதேவேளை, கட்சி தலைவர்களின் பார்வைக்காக 21 ஆம் சீர்திருத்த பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா பிரதமர் Read More

Read more

‘அஜித் ராஜபக்ஸ’ புதிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்!!

இன்று(17/05/2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இதன்போது குறித்த இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி கவிரத்ன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் அஜித் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது.   அஜித் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக Read More

Read more

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் இன்று காலை பதவியேற்றது!!

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன் போது புதிய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில், இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது.   அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் நிதி Read More

Read more

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read more

வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றம்!!

சிறிலங்கா நாடாளுமன்றில் மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.   வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.   வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.   இதனையடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன.   இருப்பினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF Read More

Read more

புதிய அமைச்சரவை இன்று பதவி பிரமாணம்!!

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சு பதவிகள் மட்டுமே இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. அரச தலைவர் உடன் பதவி Read More

Read more

மஹிந்தவைத் தவிர அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.   “பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு கையளித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.   அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபத்திற்கு மத்தியில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக சம்மதித்துள்ளனர்.   இதன்படி, தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி Read More

Read more

நாடாளுமன்றத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதுவரை 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா Read More

Read more