நான் பதவியை ஏற்க மாட்டேன்….. பிரதமர் ரணிலின் கோரிக்கைக்கு ஹர்ஷ டி சில்வாவின் பதில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ‘ஹர்ஷ டி சில்வா’ தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா, “இளைஞர்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் அமைப்பொன்றை எதிர்பார்க்கிறார்கள், அதை நான் எதிர்க்க முடியாது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக என்னால் செல்ல முடியாது. என்னை நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளை மக்கள் Read More

Read more

அதிகரிக்கப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புகள்!!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக உப காவல் பரிசோதகர் ஒருவர் உட்பட 6 அதிகாரிகளை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக குறித்த நியமனங்களை நியமிக்குமாறு காவல் அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தீவைத்து வருகின்றன நிலையில் அவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read more

வருமானம் குறைவான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. சாதாரணமாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தாலும் அரச தலைவருக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் Read More

Read more

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் இன்று காலை பதவியேற்றது!!

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன் போது புதிய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில், இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது.   அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் நிதி Read More

Read more

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read more

புதிய அமைச்சரவை இன்று பதவி பிரமாணம்!!

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சு பதவிகள் மட்டுமே இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. அரச தலைவர் உடன் பதவி Read More

Read more

நாடாளுமன்றத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதுவரை 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா Read More

Read more