தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ‘தம்மிக்க பெரேரா’ பரிந்துரைப்பு!!

தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியமையை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க பெரேரா, அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் Read More

Read more

மேலும் 22 ஆயிரம் பட்டதாரிகளை இணைக்க அமைச்சரவை அனுமதி!!

ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிப்படுகிறன்றது. 2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read more

21வது சீர்திருத்த உத்தேச வரைபு வெளியிடப்பட்டது!!

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது சீர்திருத்ததின்படி அரசியலமைப்பு பேரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என 21வது சீர்திருத்த உத்தேச வரைபு குறிப்பிடுகின்றது.   21ஆவது திருத்த சட்டத்தின் உத்தேச வரைபு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த வரைவில்   நிறைவேற்று அதிகாரமிக்க அரச தலைவர் முறையை நீக்கும் முகமாக அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நேற்று (23/05/2022) விஜயதாச ராஜபக்சவால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.   இதேவேளை, கட்சி தலைவர்களின் பார்வைக்காக 21 ஆம் சீர்திருத்த பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா பிரதமர் Read More

Read more

ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டனர்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே, 13 அமைச்சரவை அமைச்சர்கள்  பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் புதிதாக 10 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதற்கமைய புதிய அமைச்சர்களாக, கெஹலிய ரம்புக்வெல்ல– நீர் வழங்கல் அமைச்சு ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு டக்ளஸ் தேவானந்தா – Read More

Read more

அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்….. விஜயதாச ராஜபக்ச!!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் வரைவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (23/05/2022) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்ற விஜயதாச ராஜபக்ச, தாம் முதலில் அமைச்சுப் பதவியை ஏற்க விரும்பாவிட்டாலும், அரச தலைவர் மற்றும் பிரதமர் முன்வைத்த பலத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் தெரிவு இல்லாமல் பதவியை ஏற்றுக் கொண்டார் எனக் குறிப்பிட்டார். இதேவேளை, சுயேச்சையாக பதவி வகிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாகவே பதவியை Read More

Read more

அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது….. பிரதமர் ரணில் விக்ரமசிங்க!!

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரதமர் அலுவலக செலவுகளை குறைக்க முடிவு Read More

Read more

‘அஜித் ராஜபக்ஸ’ புதிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்!!

இன்று(17/05/2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இதன்போது குறித்த இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி கவிரத்ன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் அஜித் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது.   அஜித் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக Read More

Read more

காவல்துறை மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்….. பிரபல கொழும்பு ஊடகமொன்று செய்தி!!

காவல்துறை மா அதிபர்  ‘சீ.டி. விக்ரமரத்ன’ வை பதவி விலகுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி உறுப்பினர்கள் பலரது வீடுகள், சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதால் கூட்டம் ஆரம்பம் முதலே சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரச தலைவரை சுற்றிவளைத்து தமது துயரத்தை வெளிப்படுத்திய உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பாதுகாக்க தவறியதாக காவல்துறை மா Read More

Read more

வருமானம் குறைவான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. சாதாரணமாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தாலும் அரச தலைவருக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் Read More

Read more