இணையவழிமோசடி : மீண்டும் சிக்கிய வெளிநாட்டவர்கள்

இலங்கையில்(sri lanka) இணையவழி மோசடியில் தொடர்புபட்டுள்ளனரென தெரிவித்து அண்மைய சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சீன(china) பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து கைபேசிகள்,மடிக்கணனிகள், மற்றும் ரவுட்டர்கள் என பல இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் சிலாபத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 Read More

Read more

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் ஐ .நா வழங்கிய உறுதி

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இதன்போது, ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும்  இலங்கை மக்கள் மீதான அவற்றின் Read More

Read more

மக்களே அவதானம் – அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளியான எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என Read More

Read more

யாழ். வல்லை பகுதியில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஆண் பலி

யாழ்ப்பாணம் (jaffna) – வல்லை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குறித்த விபத்தானது இன்று (12.10.2024) யாழ். வல்வை பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை காவல்துறையினர் Read More

Read more

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் (Lebanon) உள்ள ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது திடீரென இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே கடந்தாண்டு தொடங்கிய இந்த போர், தற்போது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸை தொடர்ந்து ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருவதுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவும் கடந்த மாதம் கொல்லப்பட்டார். Read More

Read more

அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படைக்கு கிடைத்த நவீனரக விமானம்

இலங்கை விமானப் படைக்கு (Sri Lanka Air Force) அமெரிக்காவினால் (US) Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க – பசுபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கேலர் குறித்த விமானத்தை உத்தியோகபூர்வமாக இன்று (11) கையளித்தார். இந்த நிகழ்வில்அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் (Julie Chung), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற (Udeni Rajapaksa) எயா வைஸ் மாஷல் Read More

Read more

வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி: 87 பேர் பலி

வியட்நாமின் (Vietnam) வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாகி என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த ஞாயிற்றுகிழமை (08) வியட்நாமை தாக்கியது. புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், தொடர்ந்து மழை பெய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகளில் சிக்கி இதுவரை 87 Read More

Read more

மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: குற்றம் சாட்டியுள்ள மனித உரிமை அமைப்பு

மனிதாபிமான வலயமாக அறிவிக்கப்பட்ட அல்-மவாசி (Al-Mawazi), கான் யூனிஸ் (Khan Yunis) மற்றும் ரஃபாவில் (Rafah) உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய (Israel) இராணுவம் நடத்திய 15 தாக்குதல்களை தங்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக அல் மெசான் மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 248க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட, 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அல்-மவாசி பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பாழடைந்த கூடாரங்களில் அத்தியாவசிய Read More

Read more

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி தன்னிறைவு நிலையை எட்டியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “தற்போது, ​​நாட்டின் தினசரி முட்டை உற்பத்தி 07-08 மில்லியனாக அதிகரித்துள்ளது, மேலும், முட்டையின் தினசரி நுகர்வு அதே அளவு வளர்ந்துள்ளது. நாளாந்தம் Read More

Read more

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்…! வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை

மன்னார் (Mannar) வைத்தியசாலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். எவ்வாறாயினும் அந்தச் Read More

Read more