LSG அணிக்கு செல்லும் ரிஷப் பண்ட்.. டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் உருக்கமான பதிவு

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது. கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி Read More

Read more

எரிவாயு பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – லாஃப்ஸ் நிறுவனம்

எரிவாயு பற்றாக்குறைக்கு எதிர்வரும் சில தினங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என லாஃப்ஸ்  நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில்(25) 2 எரிவாயு கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக அவர் கூறினார். அதற்கமைய, இன்று(26) முதல் குறித்த எரிவாயு தொகை சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயுவிற்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுகின்றது. கப்பல்களுக்கு எரிவாயுவை ஏற்றும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.  

Read more

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ணம் 2024: வெற்றி வாகை சூடியது ஆப்கானிஸ்தான்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் (Afghanistan) வெற்றிப்பெற்றுள்ளது. இலங்கை(Sri Lanka) A மற்றும் ஆப்கானிஸ்தான்  A அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று (27.10.2024) ஓமானில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை Read More

Read more

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

சுற்றுலா மற்றும் பிற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை அனுமதி (Cabinet approval) கிடைத்தவுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என திறைசேரியின் (Ministry of Finance) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் Read More

Read more

யாழில் காவல்துறை உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு : ஒருவர் கைது

யாழில் (Jaffna) காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த நபர்  நேற்றையதினம் (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்து ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவை திருடப்பட்டுள்ளன. இதையடுத்து, திருட்டு Read More

Read more

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முடிவு சுங்க வரி மூலம் அரசாங்க வருவாயை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை ஆதரிப்பதற்காக வருமானம் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வாகனங்கள் மீதான சுங்க வரிகள் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருப்பதால் வாகன இறக்குமதியை Read More

Read more