பயணிகள் பேரூந்து – டிப்பர் மோதல்….. 26 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் (படங்கள்)!!
திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேரூந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளான போதே இந்த 26 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில், வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் அடங்குகின்றனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Read more