22 வயது யாழ்ப்பாண இளைஞர் போலி ஆவணங்களுடன் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார். எனினும், இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது Read More

Read more

இலகு முறையில் கடவுச்சீட்டு….. இன்று முதல் புதிய நடைமுறை!!

கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். பிரதேச செயலகங்களில் செயற்படும் ஆட்பதிவு திணைக்களத்தில் Read More

Read more

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை….. வெளிநாட்டவர்களுக்கும் வாய்ப்பு!!

பொதுமக்கள் தங்களுக்கு உரிய பிரதேச செயலகங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கி, மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இணையவழியில் Read More

Read more

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பலர் இந்த நாட்களில் வருவதே இதற்குக் காரணம என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இந்த இரண்டு பணி நேரங்களும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும்.   இதேவேளை, Read More

Read more

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு புதிய நிபந்தனைகளை வெளியீடு….. முழுமையான விபரங்கள்!!

முன்பதிவு செய்துகொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 17ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பு!!

ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(17/05/2022) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்காக, www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை Read More

Read more

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் 

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

கடவுச்சீட்டுக்களை அவசரமாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை!!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாவட்ட காரியாலயம் ஒன்றை இரத்தினபுரி நகரில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசாங்கத்திற்கும் மற்றும் குடிவரவு திணைக்களத்திற்கும் அ னுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் இக்காரியாலயத்தை அமைப்பதன் மூலம் கடவுச்சீட்டுக்களை பெற்று கொள்வதற்கு வசதியான இருக்கும். இம்மாவட்டத்தின் தூர பிரதேசங்களிலிருந்து கொழும்புக்குச் செல்வதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அதிக செலவு, சிரமம், கால தாமதம் என்பவற்றை Read More

Read more