சிகிச்சைபெற வந்த 29 வயது பெண்ணை வன்புணர்வு செய்த மருத்துவர்!!

தான்நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரால் மருத்துவர் கைது Read More

Read more

‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக….. காரணம் அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தடை Read More

Read more

திடீர் மின்தடை….. சத்திரசிகிச்சை நோயாளர்கள் எட்டு பேர் பாதிப்பு!!

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இன்றையதினம் முற்பகல் வேளை தொடக்கம் திடீரென நாடு முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று பணிபகிஷ்கரிப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் மற்றும் அனைவரும் பணிபகிஷ்கரிப்பை இன்று வியாழக்கிழமை நடத்தவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, காலை 06 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபகிஷ்கரிப்பு நடைபெறவுள்ளது. அரச ஊழியர்கள் அனைவரையும் திங்கட்கிழமை முதல் வழமைபோல சேவைக்கு அரசாங்கம் அழைத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பணிபகிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக தாதியர்கள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். இந்தப் பணிபகிஷ்கரிப்பிற்கு 44 தொழிற்சங்கங்கள் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more

கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான சுற்று நிருபம்!!

வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 – 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபமொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் தாமதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் பலர் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களை வைத்தியசாலை வார்டுக்களில் தரையில் வைக்கப்பட்டிருந்தது Read More

Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று – அமைச்சரவை அளித்த அனுமதி

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளொன்றுக்கான பி சி ஆர் பரிசோதனை யை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளர்களின் கட்டில்களின் எண்ணிக்கையை 3000 ஆக அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளளது. நாளொன்றுக்கு பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “நாங்கள் தற்போது ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்கிறோம். மேலும் Read More

Read more