UAE இற்கு பயணிப்பவர்களுக்கு கட்டாயமான Rapid PCR நெகட்டிவ் பரிசோதனை அறிக்கை தேவையில்லை!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணிக்கும் இலங்கையர்கள் கட்டாயமான Rapid PCR நெகட்டிவ் பரிசோதனை அறிக்கையைப் பெற வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பயண ஆலோசனையை நேற்று, பெப்ரவரி 22, 2022 முதல் திருத்தியமைத்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருத்தப்பட்ட பயண ஆலோசனையின் விபரங்கள் வருமாறு,

Read more

வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனிற்கு Covid19 உறுதி!!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more

37 மாணவர்களுக்கு அவசர பி.சி.ஆர் பரிசோதனை! 6 பேருக்கு தொற்று உறுதி

அங்குனகொலெவேவ – லுனுகம்வெஹெரவிலுள்ள பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் மற்றும் 3 ஆண் மாணவர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு அவசர பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குறித்த 6 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனை மற்றும் எரமினியாய கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவர்களுடைய குடும்ப உறவினர்கள் உட்பட 3 பேர் Read More

Read more