யாழ் நகரில் நாளைய எதிர்ப்பு போராடத்திற்கு….. நீதிமன்றம் தடையுத்தரவு!!

யாழ்ப்பாண நகரில் நாளை(11/02/2023) சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தில்(Jaffna Cultural Center) நாளை(11/02/2023) நடைபெறும் சுதந்திர தின விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்திற்கு தடை Read More

Read more

இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியா விசேட நடவடிக்கை!!

வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதற்க்காக 16 படகுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து 84 நபர் இதுவரை இந்தியாவிற்கு புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ள நிலையில், மேலும் இருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்திய சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் Read More

Read more

வருமானம் குறைவான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

எதிர்வரும் 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால்….. இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க!!

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11/05/2022 ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க Read More

Read more

மஹிந்தவின் அழைப்பிற்கு போராடடக்காரர்கள் மறுப்பு!!

பிரதமர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள போதும், எமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பயனும் இல்லை என காலிமுகத்திடல் பங்கேற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் இங்கு வீதிக்கு இறங்கி போராடுவதற்கான முக்கிய காரணம் பிரதமருக்கு தெரிந்திருந்தால் இவ்வாறான பேச்சுவார்த்தைள் தேவைப்படாது என நாம் நினைக்கின்றோம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

Read more

யாழில் மாபெரும் கண்டனப்பேரணிக்கு அழைப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.   ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.   கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம்,பெற்றோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டு மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.   நாளை மறுதினம் (07/04/2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு Read More

Read more

48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம்!!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் மற்றும் அரிசிக்கு அதிக விலையை விதித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அதேவேளை, எந்தவொரு தனிநபரும் 1998 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே Read More

Read more

ஹட்டனில் இன்று அதிபர், ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி!!

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கான உரிய தீர்வை பெற்று தருமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதிபர் ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று பிற்பகல் 03 மணிக்கு அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணிக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுட்டனர்.   மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ்தரிப்பிடம் வரை வந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட Read More

Read more

இதோ வெளிவருகிறது புதிய விசேட வர்த்தமானி!!

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு எதிர்கொண்டு அசாதாரண நிலைமையில் மக்களுக்கு சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அதற்காக அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் நுகர்வோரும் பாதிக்காதவகையில் சாதாரண விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். Read More

Read more