ஒமிக்ரோன் பிளாஸ்டிக்கில் 08 நாட்கள் வாழுமாம்….. புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு!!
ஒமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக்கில் 8 நாட்களும் தோலில் 21 மணித்தியாலங்களும் உயிர் வாழக்கூடியதென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் ஏனைய திரிபுகளான அல்ஃபா, பீட்டா, காமா மற்றும் டெல்டாவை விடவும் ஒமிக்ரோன், பிளாஸ்டிக் மற்றும் தோலில் உயிர் வாழும் தன்மையின் வீதம் அதிகமென கூறப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டோ மாகாண மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மதுசாரம் அடங்கிய தொற்றுநீக்கி திரவத்தை, பயன்படுத்தினால் ஒமிக்ரோன் உள்ளிட்ட அனைத்து திரிபுகளையும் 15 நொடிகளில் செயலிழக்கச் செய்து விடலாம் Read More
Read more