பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிபபு!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறை மற்றும் தனியார் வீடொன்று உட்பட இன்று காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு வெடித்துள்ளது. எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் துன்னாலை வடக்கு அமிர்தலிங்கம் பவநந்தினி என்பவரின் வீட்டிலும் காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

பருத்தித்துறைக்கு வடக்கே 300 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்!!

தென்கிழக்கு ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் (12.3Nஇற்கும்81.2E இற்கும் இடையில்) நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலையளவில் வட தமிழ்நாட்டு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில்…. குவிந்துள்ள கொரோனா சடலங்கள் – வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதனின் கருத்து!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனா நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 Read More

Read more

உடுப்பிட்டியில் இரு பகுதியினருக்கிடையே மோதல்…. குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!!

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது. இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தில் Read More

Read more

பருத்தித்துறையில் பரபரப்பு சம்பவம்- மீனவரின் அதிரடிச் செயற்பாடு!!

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை நாளாந்தமாக இழந்துள்ளனர். இந்நிலையில் பருத்தித்துறை முனை பகுதி மீனவர் இந்திய இழுவை மடி படகால் தனது பத்து இலட்சத்திற்கும் மேலான வலைகளை இழந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியுற்ற மீனவர் இருக்கின்ற வலையை வைத்து இனிமேல் கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலையில் தனது எஞ்சிய வலைகளை பெட்ரோல் ஊற்றி கொழுத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுஅதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உட்பட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

பருத்தித்துறையில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி!!

பருத்தித்துறை – மந்திகை ஆதார மருத்துவமனைக்கு நேற்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 45 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 32 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Read more

வல்வெட்டித்துறையில் நடந்த கொடூரம் – கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று  நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து Read More

Read more

பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் ஒத்திவைப்பு!!

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்றைய தினம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் முடிவில், இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுடன் Read More

Read more