மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம்….. என இ.மி.ச மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம்(31/01/2024) மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார். அத்துடன்,Electrical Engineers Association Read More

Read more

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கியில் கோளாறு….. மின்விநியோகம் தடைப்படுமா!!

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு உயர் அழுத்த வெப்பமாக்கி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கோளாறு காரணமாக மின் உற்பத்தி தடைப்படாது என்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி அலகினை அதிகளவில் செயற்படுத்துவதன் ஊடாக மின்னுற்பத்தியை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய நிர்வாகம் தெரிவிக்கின்றது. பழுதடைந்த மின்பிறப்பாக்கி அலகினை பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பழுதுபார்க்கும் காலத்தில் எந்தவித மின்சார தடையும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது. நீர் மின்சாரம் Read More

Read more

இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை….. மின்வெட்டு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர்!!

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், உற்பத்திச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவி்க்கையில், நமது மின்சார உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்குச் செல்வதில் எங்களுக்கு ஒரு பெரிய இலக்கு உள்ளது. அவற்றில் சிலவற்றை நாங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு Read More

Read more

நாளைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை வெளியீடு!!

நாளைய தினத்திற்கான (5) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

வவுனியாவில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவல்!!

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென இவ்வாறு தீப்பற்றியது. இந்த தீப்பரவலின் போது அந்நிலையத்தில் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், புதிதாக பொருத்துவதற்கென Read More

Read more

வார இறுதி மின்வெட்டு தொடர்பான அறிக்கை!!

வார இறுதி நாட்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பில் இலங்கை மின்சார சபை தகவல் வெளியிட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மின் வெட்டு தொடர்பான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், நாளை சனிக்கிழமை (23/04/2022) 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை (24/04/2022) 03 மணித்தியாலங்களுக்கும் மின் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.   இதன்படி, சனிக்கிழமை (23/04/2022) காலை 9 மணி முதல் Read More

Read more

எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் நுரைச்சோலை!!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more

இன்றைய தினம் ஐந்து மணிநேர மின்துண்டிப்பு!!

நாட்டில் இன்றைய தினம் ஐந்து மணிநேர மின்துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மூன்று மணிநேரமும் 30 நிமிடமும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணிவரை ஒரு மணி 30 நிமிடமும் மேலும், C,C1 ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணிவரை நான்கு மணிநேரமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

Read more

எதிர்வரும் நாட்களில் 15 மணிநேர மின்தடை….. CEB பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்ஜித் இந்துவர!!

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் போதியளவு கிடைக்காமை மற்றும் நீர் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானளவு நீர்த்தேக்கங்களில் நீர் இல்லாமை ஆகிய காரணங்களினால் எதிர்வரும் நாட்களில் 15 மணிநேர மின்தடையினை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்ஜித் இந்துவர (Anil Ranjith Induwara) தெரிவித்துள்ளார்.   எதிர்வரும் நாட்களில் மின்தடையினை நடைமுறைப்படுத்தும் நேரம் அறிவிக்கப்படுவதை விடவும், மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை அறிவிப்பது மிக இலகுவாக இருக்கும் Read More

Read more

நாளைய மின்துண்டிப்பு தின அடடவனை வெளியீடு!!

இலங்கையில் நாளைய தினம்(23/03/2022) மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான தகவலை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களிற்கு காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணிவரை 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், P, Q, Read More

Read more