எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்….. பிரதமர் ரணில் பகிரங்கம்(உரையின் முழுமையான விபரங்கள்)!!

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தநிலையில், இருந்து நாட்டை உயர்த்த வேண்டுமானால் பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். எமது பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய Read More

Read more

மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம்….. பிரதமர் ரணில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வர்த்தக சபைகள், திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து புதிய வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ​​மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தத்துடன், உள்ளூர் சந்தையின் தவறான நிர்வாகத்தினால் உணவுப் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார். இந்த Read More

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கடசிக்குமிடையே மோதல்….. பகிரங்கமாக கூறிய மைத்திரி!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி Read More

Read more

நாட்டில் உணவு நெருக்கடியை சமாளிக்க இன்னொரு அரசு உதவி!!

இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ‘ஜப்பான் அரசாங்கம்’ நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக, ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதற்காக இலங்கைக்கு ஜப்பானின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையின் நெருக்கடியை தீர்க்கும் முகமாக ஜப்பான் அரசு 5 பில்லியன் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் தூதுவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Read more

ரணிலுக்கு எதிராகவும் கொழும்பில் போராட்டம்!!

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ  நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து (ஜன. 12) அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டக்காரர்கள் டீல் அரசியலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அதனைக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரணில், ராஜபக்ச Read More

Read more

சற்று முன்னர் பிரதமாராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார்.   ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் 1993 – 1994 வரை அவர் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.   அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி Read More

Read more

பதவி விலகினார் மஹிந்த!!

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.   சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.   நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவரது ராஜினாமா அறிவித்தல் வெளியாகியுள்ளது.   இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச அதிபர் Read More

Read more

பத‌வி விலகல் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவ‌ல்!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் சற்று முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.   அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ச முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன்போது, தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

Read more

கண்டியிலிருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை!!

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது. இது சுதந்திரப் போராட்டத்தின் அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது. நடைபவனியின் இறுதியில் மே 1ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணியை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more

மஹிந்தவின் அழைப்பிற்கு போராடடக்காரர்கள் மறுப்பு!!

பிரதமர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள போதும், எமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பயனும் இல்லை என காலிமுகத்திடல் பங்கேற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் இங்கு வீதிக்கு இறங்கி போராடுவதற்கான முக்கிய காரணம் பிரதமருக்கு தெரிந்திருந்தால் இவ்வாறான பேச்சுவார்த்தைள் தேவைப்படாது என நாம் நினைக்கின்றோம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

Read more