இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

மருமகனால் மாமனார் அடித்து கொலை!!

புத்தளம் – சேகுவந்தீவு பகுதியில் மாமனாரை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. மதுபோதையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதிலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதன்போது தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலை செய்த சந்தேக நபர் புதுவருட தினத்தன்று குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் Read More

Read more

நல்லூர், அம்பாறை, புத்தளம் ஆகிய பகுதிகளில் இன்று இதுவரையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார். இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை Read More

Read more

புத்தளத்தில் எரிவாயு ஆலையில் வெடி விபத்து….. ஆபத்தான நிலையில் இருவர்!!

புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 வயது மற்றும் 24 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது  வைத்தியசாலையில்  ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோட்டார் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளைப் புதுப்பிக்கும் இடத்தில் Read More

Read more