அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத அதிபர்கள் சங்கம்!!

புகையிரத அதிபர்கள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் , இந்த பணிப்பகிஷ்கரிப்பு  இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். புகையிரத பயண கால அட்டவணையை நடைமுறைப்படுத்தாமை, தொடருந்து ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. புகையிரத அதிபர்கள் தொடர்பான அனைத்துப் பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தொடருந்து நிலைய நிர்வாகக் குழு தீர்மானத்துள்ளது. தூர சேவை புகையிரதங்களை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் Read More

Read more

இன்று நள்ளிரவு முதல் பற்றுச்சீட்டு விநியோகத்திலிருந்து விலக்கவுள்ளோம் (26 முதல் தொழிற்சங்க நடவடிக்கை)….. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்!!

பொதிகள் போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களை இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து ரயில்களை தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். எனினும், இந்த தீர்மானம் தொடர்பில் ரயில் நிலையங்களுக்கு அறிவிக்கப்படாதமையால் அதிகளவிலான பொதிகள் குவிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்கப்படாமையினால் சேவை Read More

Read more

ரயில் போக்குவரத்துக்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!!

மேல் மாகாணத்துக்குள் இயங்கும் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன தெரிவித்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 புகையிரத சேவைகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார். எனினும் கடுமையான சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more