“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது……” குமார் சங்ககார!!

ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குமார் சங்ககாரவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது. மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

Read more

ரம்புக்கனையில் விசேட அதிரடிப்படை,இராணுவம் குவிப்பு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டை அடுத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை மா அதிபரி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டம் நடத்தியவர்கள் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், அதனைத் தடுக்க காவல்துறையினர் பலத்தை பயன்படுத்தியதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.    

Read more

கலவரக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூட்டு தாக்குதல்….. ஒருவர் மரணம் – கவலைக்கிடமான நிலையில் இருவர்!!

ரம்புக்கனையில் பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்தை பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி முற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்   தற்போது ரம்புக்கனை பகுதியில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read more