ஜேர்மனியில் மாணவர்களுடன் சென்ற ரயில் தடம் புரண்டது!!
ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற பவேரியன் ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது ரயிலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 60 பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுடன் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Read more