அனைத்து பல்கலைக்களகங்களின் மீள் ஆரம்பம் தொடர்பாக வெளியான தகவல்!!

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அந்த ஆணைக்குழு அந்த தெரிவித்துள்ளது. சகல மாணவர்களையும் உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunga) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் Read More

Read more

இதுவரையிலும் ஆரம்பிக்கப்படாத வகுப்புகளின் ஆரம்பம் தொடர்பில் இறுதி முடிவு!!

அரச பாடசாலைகளின் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22 ஆம் திகதி திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும (Dulas Alakaperuma) தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் ​போதே அவர் இந்த விடயத்தினை  Read More

Read more

97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர். பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென Read More

Read more

நீண்ட நாட்களுக்கு பின் நாடளாவிய ரீதியில் இன்று மீள ஆரம்பமானது 3,800 பாடசாலைகள்!!

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி இன்று முதல் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardana) தெரிவித்தா் . நீண்ட காலங்களுக்குப் பின் இலட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் ஆவலுடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பரெனவும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலத்துக்குப் பின் தமது பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகத்தை நேரடியாக காண்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களென தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கல்வி என்பது பிள்ளைகளின் எதிர்காலமென்பதுடன் அது பிள்ளைகளின் வளர்ச்சிக்கான Read More

Read more

பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

நவம்பர் மாதத்தில் பாடசாலையில் அனைத்து வகுப்புகளும் ஆரம்பம்…. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்க இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Vithanage) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் என்றும் Read More

Read more

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள திறக்கலாம்….. சுகாதார அமைச்சு!!

தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் தேவை மாத்திரமன்றி, அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அவசியமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் மன ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையினால், Read More

Read more

முன்பள்ளிகள், தரம் 6 வரைக்குமான 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்……

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் விரைவில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நேற்று (15) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்பள்ளிகள், தரம் 6 வரைக்குமான 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் விரைவில் திறப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சகம் இறுதி செய்து வருகிறது. அதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பாடசாலைகளை திறப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் சுகாதார Read More

Read more

பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சர் பதில்!!!!

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இணையத்தின் மூலமான கல்வியை மேலும் சிறிது காலம் தொடர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. Read More

Read more