கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு….. விவசாய அமைச்சு விளக்கம்!!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார். நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயற்பாடுகளே சந்தையில் கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துள்ளனர். மேலும், அவற்றை சந்தைக்கு Read More

Read more

திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்….. விலை விபரம் உள்ளே!!

10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 01. காய்ந்த மிளகாய் 1 கிலோ ரூ. 1290.00 02. சிவப்பு பருப்பு 1 கிலோ ரூ. 299.00 03. Read More

Read more

யாழில் ஒரு மூட்டை நெல் கொடுத்து – 6 லீற்றர் பெற்றோல் வாங்கி….. அதில் 02 லீற்றர் ஐ பிறந்தநாளுக்கு பரிசளித்த பல்கலைக்கழக மாணவி!!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்ததினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள். அப்போதே, குறித்த மாணவி நெல்லு கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார். யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் Read More

Read more

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (26/06/2022) முதல், சிறிய உணவுகள், கொத்து மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது.

Read more

ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கு அனைத்து சிறப்பு அங்காடிகளிலும்!!

சதொசவிற்கு மாத்திரம் விநியோகிக்கப்பட்ட இறக்குமதி அரிசி தொகை நிறைவடையும் வரை அவற்றை சிறப்பு அங்காடிகளுக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன், நுகர்வோர் ஒருவருக்கு ஆகக்குறைந்தது ஐந்து கிலோ கிராம் அரிசி விநியோகிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 175 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நாட்டின் தற்போதைய துயரமான நிலை குறித்து எமது பசங்க FM வானொலி மூலம் வெளியிடப்பட்ட பாடல்!!

இலங்கையில் தற்போது கடந்த சில மாதங்களாக அசாதாரணமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ‘இலங்கை நாடானது மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது’, அடுத்த சோமாலியா இலங்கை தான்’ என பலரும் பல கோணங்களில் தமது ஆவேசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையின் இளைய தலைமுறையாக திகழ்ந்து வரும் எமது தமிழ் இளைஞர்களின் வானொலியாக திகழ்ந்து வரும் பசங்க FM வானொலி ஆனது இலங்கை மக்கள் சார்பாக தமது ஆக்கத்திறன் Read More

Read more

11,000 தொன் அரிசியுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்!!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40,000 தொன் அரிசியில் இருந்து 11,000 தொன் அரிசியை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று (12/04/2022) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்படி, 7000 தொன் நாட்டு அரிசி, 2000 தொன் சம்பா அரிசி, 2000 தொன் சிவப்பு அரிசி உட்பட அண்ணளவாக நான்கு நாட்களுக்குள் இந்தியாவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து இந்த அரிசித் தொகை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அரசாங்க Read More

Read more

யாழில் மாபெரும் கண்டனப்பேரணிக்கு அழைப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.   ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.   கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம்,பெற்றோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டு மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.   நாளை மறுதினம் (07/04/2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு Read More

Read more

சந்தைகளில் சகல ரக அரிசிகளின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் (P.K Ranjith) தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை Read More

Read more

48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம்!!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் மற்றும் அரிசிக்கு அதிக விலையை விதித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அதேவேளை, எந்தவொரு தனிநபரும் 1998 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே Read More

Read more