அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ரஷ்யா!!

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உக்ரைன் Read More

Read more

பொதுமக்கள் தஞ்சமடைந்த தியேட்டரை அழித்திருக்கிறார்கள்…… நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இன்று 22 ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது. மேலும், மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படைகள் தடுத்து Read More

Read more

தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானப்படை விமானம்!!

ரஷ்ய விமானங்கள், உலங்கு வானூர்திகள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன. உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிபதிவாகியுள்ளது. வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன. தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட Read More

Read more

ரஷ்ய உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்திய உக்ரைன் படையினர் (காணொளி) !!

உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தும் தரைப்பிரிவுக்கு பாதுகாப்பை வழங்கி தாக்குதலை மேற்கொண்டுவரும் ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தியை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்று பத்தாவது நாளாகவும் தொடர்ந்ந வண்ணமுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ஆயுதப்படையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலியில், ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக…… அந்த காட்சியில் ரஷ்யாவின் உலங்கு வானூரதி ஒன்று சுட்டு Read More

Read more

உலகின் மிகப்பெரிய போர் விமானம் உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்ட்து!!

உலகின் மிகப்பெரிய போர்விமானமான ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார். மேலும். ” எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம்.   ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது ” என்றும் தெரிவித்திருந்தார். உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக……   

Read more

நவம்பர் 4 முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவை வழங்கும் ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம்!!

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கைக்கான நேரடி விமான சேவையை வெளிநாடொன்றின் விமான நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி ரஷ்யாவின் எரோபுளொட் (Aeroflot) என்ற விமான சேவை நிறுவனமே எதிர்வரும் நவம்பர் 4 ஆம்திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. Read More

Read more