ரஷ்யா மூர்க்கத் தனம்….. கலக்கத்தில் உக்ரைன்!!

உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள நோவா ககோவ்கா அணை தகர்ப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவசர பணியாளர்கள் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல்களை நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெள்ளம் ஏற்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை ரஷ்யப் படையினர் கைவிட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும் ரஷ்யாவின் எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் மீட்பு பணிகள் Read More

Read more

ஜோ பைடன் உக்ரைனுக்கு விஜயம்….. உக்ரைனில் இரவு முழுவதும் குண்டுமழை பொழிந்த ரஷ்ய இராணுவம்!!

ஜோ பைடனின் உக்ரைன் விஜயத்தின் பின்னர் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் உட்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவம் மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ தளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷ்ய இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் Read More

Read more

வேறு வழியின்றி ரூபிளில் கட்டணத்தை செலுத்தி ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்க சம்மதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

ரஷ்யா – உக்ரைன் போர் 64 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.   இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டொலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது.   ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி Read More

Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச களங்களில் நேர்ந்த சோகம்!!

ரஷ்ய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. அதுமட்டுமின்றி, லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் Read More

Read more

ஒருபக்கம் சமாதான பேச்சுவார்த்தை, மறுபக்கம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை குழப்பும் புடின்!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பரீட்சித்துள்ளது. ஏவுகணை பரீட்சிக்கப்பட்ட காணொளியையும் ரஷ்யா வௌியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் வட மேற்கு பகுதியிலுள்ள ஆர்க்காங்கெல்ஸ்கில் அமைந்துள்ள ‘பிளெசெட்ஸ்க்’ (Plechetsk) விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ரஷ்யாவின் கிழக்கு “கம்சட்கா தீபகற்பத்தில்” (Kamchatka Peninsula) தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிந்தனைக்கான உணவு என ரஷ்ய ஜனாதிபதி “விளாடிமீர் புட்டின்” தெரிவித்துள்ளார்

Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ரஷ்யா!!

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உக்ரைன் Read More

Read more

மிரள வைக்கும் ரஷ்ய படைகளின் திட்டம்

உக்ரைன் மீதான படையெடுப்பில் அடுத்த மாதம் 9 ஆம் திகதிக்குள் ஒரு பெரிய இராணுவ வெற்றியை பெற்றுக்கொள்ள ரஷ்யா முயல்வதால் அதன் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாசி ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை குறிக்கும் நிகழ்வுகள் வருடாந்தம் மே 9 ஆம் திகதியன்று மொஸ்கோ ரஷ்ய செஞ் சதுக்கத்தல் நடத்தப்படுவது வழமை. அன்றைய நாளில் இராணுவ வெற்றி அணிவகுப்பு மற்றும் அரச தலைவர் விளாடிமிர் புடினின் உரை ஆகிய Read More

Read more

எரிபொருள் நிரப்ப வழியில்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடுக்கடலில் சிக்கியுள்ள சூப்பர் கப்பல்!!

ரஷ்ய அதிபர் புடினின் நண்பர் விளாடிமிர் ஸ்ட்ரசல்கோவ்ஸ்கிக்கு சொந்தமான சூப்பர் கப்பல் ஒன்று நோர்வே கடற்பகுதியில் எரிபொருள் நிரப்ப வழியில்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கியுள்ளது. விளாடிமிர் ஸ்ட்ரசல்கோவ்ஸ்கி ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் முகவர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர். ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர். இவருக்கு சொந்தமான சூப்பர் கப்பல் ஒன்று நோர்வேயில் எரிபொருள் நிரப்ப வழியில்லாமல் சிக்கியுள்ளது. இந்த கப்பல் பெப்ரவரி 15 முதல் நோர்விக் துறைமுகத்தில் Read More

Read more

ரஷ்யா படைகளை 70கி.மி வரை அடித்து துரத்தியது உக்ரைன் படை!!

உக்ரைன் தலைநகருக்கு வெளியே ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீண்டும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ்வின் புறநகர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களை ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது. மேலும், கீவ் நகரை நெருங்கி வந்த ரஷ்ய படைகளை 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு பின் நோக்கி செல்ல வைத்து இருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கீவ் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் Read More

Read more

ரஷ்யாவின் நான்கு உலங்குவானூர்திகள், விமானம் மற்றும் க்ரூஸ் ஏவுகணை உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தல்!!

ரஷ்யாவிற்கு சொந்தமான நான்கு உலங்குவானூர்திகள், ஒரு விமானம் மற்றும் ஒரு க்ரூஸ் ஏவுகணை என்பன உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உக்ரைன் ரஷ்யப் போர் தொடர்ந்தும் உக்கிரமடைந்துவரும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடுகளைத் தாக்குவதற்கான மூலவளங்கள் இல்லாத நிலையில் மே மாத ஆரம்பத்தில் போர் முடிந்துவிடும் Read More

Read more