நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை உக்ரைன் மக்களுக்கு அனுப்பும் கூகுளின் புதிய அப்டேட்!!

உக்ரைனிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய வசதி ஒன்றை வழங்கியுள்ளது. இதன்படி, அண்ட்ரொய்ட்(Android) பயனாளர்களுக்கு வான்வெளித் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் ஆரம்பித்துள்ளது. பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரைனில் நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை அனுப்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை நம்பியே Read More

Read more

மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்(பதறவைக்கும் காணொளி)!!

உக்ரைனின் தென் பிராந்தியத்தில் உள்ள மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலை வளாகம் மீதான இந்த தாக்குதலானது யுத்தக் குற்றமென உக்ரைன் அதிபர் வெலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேவேளை, மிகப் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக மரியுபோல் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்ட Read More

Read more

உக்ரைனில் இருந்து 27 இலங்கையர்கள் வௌியேற மறுப்பு!!

27 இலங்கையர்கள் உக்ரைனில் இருந்து வௌியேற மறுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் பேராசியரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.   உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்களில் 15 பேர் மாணவர்கள் எனவும் ஏனைய 66 பேரில் 39 பேர் தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளதாகவும் G.L.பீரிஸ் கூறினார்.   அவ்வாறு வௌியேறியவர்கள் போலந்து, ருமேனியா, மோல்டோவா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.   இந்நிலையில், எஞ்சியுள்ள 27 இலங்கையர்கள் உக்ரைனிலிருந்து வௌியேற விரும்பவில்லை என G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.   உக்ரைன் – ரஷ்யா Read More

Read more

உக்ரைனின் கோஸ்டோமல்(Hostomel) நகர மேயர் சுட்டு கொலை!!

உக்ரைன் கோஸ்டோமல்(Hostomel) நகர மேயர் யூரி பிரைலிப்கோ(Yuri Prilipko) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hostomel நகரம் உக்ரைனிய தலைநகர் கிவ்வுக்கு அருகில் உள்ளது. இது ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகளுக்கு இடையேயான சண்டையின் மையத்தில் ஒரு முக்கிய மூலோபாய புள்ளியான Hostomel விமான நிலையத்திற்கு சொந்தமானது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் போது யூரி பிரைலிப்கோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Hostomel பேரவை Read More

Read more

தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானப்படை விமானம்!!

ரஷ்ய விமானங்கள், உலங்கு வானூர்திகள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன. உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிபதிவாகியுள்ளது. வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன. தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட Read More

Read more

ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்திய இரு முக்கிய நிறுவங்கள்!!

டிக்டொக் செயலி நிறுவனம் ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “போலி செய்திகளுக்கு” 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். இந்த சட்டத்தின் மூலம், இராணுவத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை Read More

Read more

ரஷ்யா தொடர்பாக உலகவங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது. பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவிலும், அதன் நட்பு நாடான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது. இதுதொடர்பில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் Read More

Read more

உக்ரைனில் தாக்குதல் நிறுத்தப்படுமா? புடின் வெளியிட்ட அறிவிப்பு

ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உக்ரைனில் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனை வான், கடல்,நிலம் என அனைத்து வழிகளிலும் ரஷ்யா தாக்கி வருகிறது. இதனை சிறப்பு இராணுவ நடவடிக்கை என புடின் கூறுகிறார். மேலும் நாட்டை நாஜிக்கள் அற்ற நாடாக மாற்ற இது தேவை Read More

Read more

ரஷ்ய உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்திய உக்ரைன் படையினர் (காணொளி) !!

உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தும் தரைப்பிரிவுக்கு பாதுகாப்பை வழங்கி தாக்குதலை மேற்கொண்டுவரும் ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தியை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்று பத்தாவது நாளாகவும் தொடர்ந்ந வண்ணமுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ஆயுதப்படையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலியில், ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக…… அந்த காட்சியில் ரஷ்யாவின் உலங்கு வானூரதி ஒன்று சுட்டு Read More

Read more

தனது புதிய தயாரிப்புகள், சேவைகளை போன்ற அனைத்து விதமான விற்பனைகளையும் நிறுத்திய முக்கிய நிறுவனம்!!

ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் Read More

Read more