பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர் யாழ் போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதன்படி, இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை கூட செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும் Read More

Read more

மீண்டும் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!!

 நாடு முழுவதும் உள்ளூர் சந்தையில் லாஃப் (Laufs) மற்றும் லிட்ரோ(Litro) சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் தலைவர் டபிள்யூ.கே.எம்.வேகபிட்டிய (WKM Vekapitiya)தெரிவித்துள்ளார். நாட்டில் அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக ரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப் (Laufs) சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். எனினும் Read More

Read more

ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாதளவில் ஏட்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு!!

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் எரிவாயு துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் கோடைகாலத்தில் குளிரை அல்லது அதிகமான எரிவாயுக்கான மின் கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் எரிசக்தி கைத்தொழிற்துறையானது குறிப்பிடத்தக்க அளவில் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ளும் என துறைசார்ந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருகையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் மொத்த எரிவாயு விலையானது என்றுமில்லாத வகையில் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக Read More

Read more

பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்….. இலங்கை அரசாங்கம்!!

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் இன்று முதல் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை Read More

Read more

இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என கனியவள தேசிய சேவையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது 11 நாட்களுக்கு போதுமான டீசல் இருப்பில் உள்ளதாகவும் 10 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே இருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more

இந்தோனேஷியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாடு!!

இந்தோனேஷியாவின் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு இந்தோனேஷிய அரசாங்கம், உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒக்சிஜனுக்காக தட்டுப்பாட்டினால் 63 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் நாளாந்தம் 25,000 இற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. வேகமாக பரவும் டெல்டா வைரஸ் பிறழ்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தென்கிழக்காசியாவில் கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேஷியா பதிவாகியுள்ளது. இதுவரை 2.3 மில்லியன் கொரோனா நோயாளர்கள் Read More

Read more