பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து….. ஆபத்தான நிலையில் 36 மாணவர்கள்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29/02/2024) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று(29/02/2024) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more