பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து….. ஆபத்தான நிலையில் 36 மாணவர்கள்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29/02/2024) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று(29/02/2024) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வீதியை விட்டு விபத்து….. மாணவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியில்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பம்….. ஆனால் மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு Read More

Read more

அடுத்து பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணமும் அதிகரிப்பு!!

பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்துச் சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி (Harischandra Premasiri) தெரிவித்துள்ளார்.   மேலும் தெரித்த அவர், பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு தற்போது அறவிடப்படும் மாதாந்த தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும். அத்துடன், கிராமப் புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 ரூபா தொடக்கம் 300 Read More

Read more

17.44 சதவீதத்தால் இன்று முதல் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணம்!!

இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளன. பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த 29 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய பேருந்து பயணக் கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டதுடன், இன்று முதல் புதிய கட்டண முறை நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டது. புதிய கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விசேட அறிவிப்பு அடங்கிய ஆவணங்கள், பயணிகள், பேருந்துகளின் உரிமையாளர்கள், பேருந்து ஊழியர்கள் என Read More

Read more