சுற்றுலா சென்றதற்காக அதிபரால் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!!
கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25/06/2023) திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை(26/06/2023) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27/06/2023) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். Read More
Read more