லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுத் தொகையை உணவகங்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உள்நாட்டு எரிவாயுக் கொள்கலன் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயுவுடன் மேலும் Read More

Read more

பாடசாலை நேரம் ஒருமணத்தியாலத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம்!!

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளது

Read more

தங்கள் ஆசைக்கு இணங்காத்தால்….. சக மாணவிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்த 05 மாணவர்கள்!!

ராஜஸ்தான் மாநிலம், ஹலினாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவியுடன் படித்துவந்த சக மாணவர்கள் 5 பேர் அந்த மாணவியை சுற்றி சுற்றி வந்துள்ளனர். ஒரே வகுப்பு மாணவர்கள்தானே என்று அந்த மாணவியையும் இவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அந்த 5 மாணவர்கள், மாணவியிடம் சென்று எங்களுக்கு உன் மேல் ஆசை இருக்கு. ஆதலால் எங்களின் ஆசைக்கு இணங்குமாறு சொல்லி அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மறுத்துள்ளார். பல முறை Read More

Read more

ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆப்பு!!

ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக எந்த வித இடமாற்றங்களையும் நடைமுறைப்படுத்தாத நிலையிலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது. ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு பாதிப்படைந்திருந்தது. இந்த நிலைமை நீடிக்காது இருக்க இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க இணைய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், விண்ணப்பங்கள் Read More

Read more

பொதுவிடுமுறையாக 11, 12 திகதிகளில் வங்கி சேவைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!!

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறித்த இரு தினங்களும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த  நிலையிலும்  வங்கி சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இரண்டு பொது விடுமுறை தினங்கள் அடுத்த வாரத்தில்!!

அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறை தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 11/04/2022,  12/04/2022ஆகிய திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் விசேட அறிக்கை!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

18 வயது மாணவன் சடலமாக கிணற்றிலிருந்து மீட்பு!!

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13.03.2022).மாலை 04.30மணியவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த மாணவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியினை Read More

Read more

பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 12 வயது சிறுமி!!

யாழ்ப்பாணத்தில், தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் எனத் தெரிவித்து சிறுமியொருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நின்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இது தொடர்பில் சிறுமி காவல் நிலையத்தில் தெரிவித்திருப்பதாவது, யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மது போதையில் வந்து Read More

Read more

18 வயதான மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை!!

பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்று பகல் மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாணவியின் சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் Read More

Read more