ஹஜ் யாத்திரை தொடர்பில் சவூதி அரசு வெளியிட்டுள்ள செய்தி!!
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு 60,000 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக சவூதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ஜூலை மாதம் மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கொவிட்19 பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். Read More
Read more