திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு – உயிரிழந்தும் 07 பேராக வாழும் மாணவி….. வெளியாகிய பெறுபேறுகளில் அதிவிசேட சித்திகள்!!

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3A  பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று Read More

Read more

எரிபொருள் விநியோக இடைநிறுத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பிலான அறிவிப்பொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எரிசக்தி அமைச்சில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொள்கை ரீதியில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகிக்கும் தாங்கிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன Read More

Read more

நிறுவப்பட்ட்து “ஆர்ப்பாட்ட செயலகம்”….. இலங்கையிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கையை இரு நாட்களில் வெளியிடவுள்ளோம்!!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் Read More

Read more

டொலரின் பெறுமதி மீண்டும் நாட்டில் அதிகரிப்பு!!

ஒரு அமெரிக்க டொலர் 275 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற பல முன்னணி வங்கிகள் அமெரிக்க டொலரை மிக அதிக அளவில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன. மேலும், டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தொடர்ச்சியாக அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்கின்றது. இந்நிலையில், பொருட்களின் விலையும் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

இன்றைய மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Read more

திங்கட்கிழமை(28/02/2022) முதல் 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும்….. கெமுனு விஜேரட்ண!!

எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார். எரிபொருள் இல்லாவிட்டால், பெரும்பாலும் திங்கட்கிழமை முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும். எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும். இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more