மீண்டும் வரிசை யுகம்….. அபாய மணியடித்த ரணில்!!

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் வருமானத்தை அதிகரிக்காது, பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் விருப்பமின்றியேனும் கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிடும். இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் முக்கிய Read More

Read more

இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குகிறது அமெரிக்கா….. அமெரிக்க தூதுவர் அறிவிப்பு!!

இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்க வழங்கவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அறிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து நடத்தப்படும் ஆட்கடத்தல் தடுப்பு திட்டத்திற்காக குறித்த நிதியுதவியை வழங்குவதாக ஜூலி சுங் மேலும் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமெரிக்க தூதுவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். கடத்தலின்போது தப்பிப்பிழைப்பவர்களைப் பாதுகாக்கவும் கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று சுங் தமது டுவிட்டில் கூறியுள்ளார்.   The US is Read More

Read more

இலங்கைக்கு உதவ கூட்டு நிதியம் நிறுவ திட்டம்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா நாடுகள் இணைந்து கூட்டு நிதியம் நிறுவ ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. நாட்டில் தற்போது இடம் பெற்று பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுப்பெற்று அதனுள் வன்முறை திணிக்கப்பட்டதன் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி இருந்தார். அதன் Read More

Read more

மீளுமா இலங்கை!! – டொலர்களை வழங்கும் மற்றுமோர் நாடு

நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   This builds on our long history of 🇳🇿 Read More

Read more

ரணிலால் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம்! விறுவிறுப்பாய் நகரும் அரசியல் களம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையின் அதிகாரங்களைக் குறைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே, பல கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 21வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. 21வது Read More

Read more

நாளைய மின்வெட்டு தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாளை வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. இதன்படி நாளையதினம் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் வழமை போன்று 03 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். மாறாக ஊரடங்குச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more